சிறப்பு ரயில்கள்.. நெல்லை டூ திருச்செந்தூர், செங்கோட்டை... இது தான் டைமிங் பாருங்க!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்.. நெல்லை டூ  திருச்செந்தூர், செங்கோட்டை... இது தான் டைமிங் பாருங்க!!

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 2 முறையும் மாலை ஒரு முறையும் என 3 முறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும், மாலை 4.25 மணிக்கும் ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் கூடுதலாக நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 9. 10 மணிக்கும், மதியம் 1.50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து கூடுதலாக மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 10.05 மணி மற்றும் பிற்பகல் 2.55 மணிக்கு ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.