திருச்சியில் வேளாண் சங்கமம் 2023... தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!!

திருச்சியில் வேளாண் சங்கமம் 2023... தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!!

திருச்சியில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளாா். 

2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருச்சி சென்றுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அங்கு நேற்று நடைபெற்ற 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா்.

அதனை தொடா்ந்து இன்று திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியை முதலமைச்சா் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார்.

மாநில அளவில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 250 உள் அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன. கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்க திடல்கள், பசுமைகுடில்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் விவசாயிகளுக்கு பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறுகிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

இதையும் படிக்க || "3வது முறை பாஜக ஆட்சி அமைந்தால், உலகளவில் 3வது நாடக முன்னேறும்" பிரதமர் மோடி பேச்சு!