மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் தலைமையில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் முதலமைச்சர் தலைமையில் மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையிலான இக்குழுவில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போக்குவரத்து, சமூகநலன் உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் விதத்தில் கொள்கை வகுப்பது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் இக்குழு பரிந்துரைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.