ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிக்கும் நிலை... புதிய வீடு கட்டித்தர கோரும் இருளர் இன மக்கள்...

போச்சம்பள்ளி அருகே வீடு, கழிவரை மற்றும் அடிப்படை வசதி இன்றி வாழும் இருளர் இன மக்கள்

ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிக்கும் நிலை... புதிய வீடு கட்டித்தர கோரும் இருளர் இன மக்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அருகே என். தட்டக்கல் பகுதியை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த 12 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 40ஆண்டுகளுக்கு முன்பு 12 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் ஒரு வீட்டில் 2 குடும்பங்கள் வசித்து என 19 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் 80 சதவீதத்திற்கு மேல் வீட்டின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், இருப்பு கம்பிகள் தெரிந்தும் சுவற்றில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சுவற்றில் நீர் கசிந்து தரை முழுவதும் ஈரமாக உள்ளது. இதிலேயே படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கழிவறை இல்லாமல் வெளிபுறத்தில் செல்வதால் தொற்று ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீதி வசதி இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் மழையால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி என வீட்டில் உள்ள அனைவரும் அச்சத்துடன் இரவில் உறங்க வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில் விடிய, விடிய உறங்காமல் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.