விலை குறையும் வரை பஞ்சு கொள்முதல் நிறுத்தம் - தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிவிப்பு

விலை குறையும் வரை பருத்திப் பஞ்சு கொள்முதல் செய்யப் போவதில்லை என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிவித்துள்ளது.

விலை குறையும் வரை பஞ்சு கொள்முதல் நிறுத்தம் - தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிவிப்பு

ஜவுளித் துறையின் மூலாதாரமான பஞ்சின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

356 கிலோ எடை கொண்ட ஒரு கேண்டியின் விலை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. பருத்தி விளைச்சல் குறைவு மற்றும் சர்வதேச சந்தை பற்றாக்குறை காரணமாக தினசரி விலை உயர்வை சந்தித்து வருவதால், பஞ்சாலைகள், நூற்பாலை கள், விசைத்தறி உள்ளடக்கிய ஜவுளித்துறை ஒட்டுமொத்த பாதிப்பை சந்தித்துள்ளது.

இது குறித்து பேசிய தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் ஜெகதீஷ், பஞ்சு வர்த்தகர்களிடம் தேக்கம் அடைந்துள்ள பஞ்சினை உரிய விலை நிர்ணயம் செய்து ஆலைகளுக்கு  வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் இன்று முதல் விலை குறையும் வரை பஞ்சு கொள்முதல் செய்யப் போவதில்லை என்ற தங்களின் முடிவால் தமிழகத்தில் மட்டும் தினசரி 500 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை  வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்றும்  தெரிவித்தார்.