இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வினோத வழிபாடு..!

இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட பாரம்பரிய சிறுதானிய உணவுகளை பனை ஓலையில் பரிமாறி வழிபாடு..!

இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட வினோத வழிபாடு..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி கிராமத்தில் அப்பகுதி விவசாயிகள் வறட்சி, மழை வெள்ளம் போன்ற  இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக, முன்னோர்கள் காலத்து பாரம்பரிய  முறைப்படி சிறுதானிய உணவுகளை சமைத்து பனை ஓலையில் விவசாயிகள், பொது மக்களுக்கு பரிமாறி வினோத வழிபாட்டில்  ஈடுபட்டனர்.

முன்னதாக கடந்த ஆண்டு தங்களது வயலில் விளைந்த நெல், கேழ்வரகு, மக்காச்சோளம், திணை, சோளம், குதிரைவாலி, பாசிப் பயறு, உளுந்தம் பயிறு உள்ளிட்ட சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகளை ஒன்று சேர்த்து சமைத்து மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கையுடன் கிராமத்தில் ஆண்களுடன் பெண்களும் நகர்வலம் சென்று முத்தாரம்மன் காளி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கமுதி, கடலாடி முதுகுளத்தூர் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மழையின் அளவு அதிகரித்ததால் கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. அதனால் விவசாயிகள் அனைவரும் பாதிப்படைந்தனர். அதனால் இந்த ஆண்டு கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.