ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். 

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  எச்சரிக்கை

சட்டப்பேரவையில் பேசிய  அன்பில் மகேஷ், வரும் கல்வியாண்டில் இருந்து முதலில் நீதி போதனை வகுப்புகள் நடத்திய பிறகே மற்ற பாடங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்து உள்ளதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஆசிரியர்களுக்கு மாணவர்கள்  தொந்தரவு கொடுத்தாலும், ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார். தொடர்ந்து  இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் டி.சி மற்றும் Conduct சான்றிதழில் காரணம் குறிப்பிட்டு, மாணவர்கள் நிரந்தரமாக பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.