கருணாநிதி குடும்பத்துக்குப் பிடிக்கலன்னா குண்டாஸ் போடுவார்களா... நண்பனுக்காக எகிறிய மாரிதாஸ்!!

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சனம் செய்து யூடியூபர் மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதி குடும்பத்துக்குப் பிடிக்கலன்னா குண்டாஸ் போடுவார்களா... நண்பனுக்காக எகிறிய மாரிதாஸ்!!

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சங்கர் நகர் போலீசில் திமுக ஐடி விங்க் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், ஜூன் மாதம் 17ம் தேதி யூடியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ரோகிணியும் கிஷோர் கே சாமி மீது புகார் அளித்திருந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் சிலர் கிஷோர் சாமி மீது ஏற்கனவே வழங்கிய புகார்களுடன் இப்போது வழங்கியுள்ள புகார்களை சேர்த்து பல காவல் நிலையங்களில் விசாரணை ஆரம்பித்துள்ளது. புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்தான், கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்   வழக்கு பதிவு செய்து சென்னை போலீஸ் கமிஷனர்  உத்தரவிட்டுள்ளார்.

இதனால் இன்னும் 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி.நண்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் கொந்தளித்த மாரிதாஸ் திமுகவை தில்லாக விமர்சனம் செய்து வருகிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரிதாஸ், கள்ளச்சாராயம், போதைப் பொருள், பாலியல் தொழில்,மணல் திருட்டு, ரவுடிகள்,தேசத்திற்கு எதிரான சதி எனக் குற்றங்கள் செய்யக் கூடியவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கலாம் சரி, கருணாநிதி குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை என்றால் அடைக்கலாம் என்பது காவல்துறை மாண்பைக் குறைக்கிறது என்றும்,

நகைக் கடன் தள்ளுபடி எப்போது?  ஏழை நடுத்தர பெண்கள் இந்த கொரோனா காலத்துப் பொருளாதார சிக்கலில் உள்ளதால் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ள மாரிதாஸ், உதயநிதி சொன்னார் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதியிலும் திமுக உறுதியளித்தது என கூறினார்.

நாங்க வந்ததும் நீட் தேர்வு நீக்குவோம் என்று சொல்லல.முயற்சி எடுப்போம்னு தான் சொன்னோம் - ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். மகா ஜனங்களே கேட்டுச்சா! விடியல் உதயநிதி சொல்லல?கனிமொழி சொல்லல?ஸ்டாலின் சொல்லல?அனைவரும் இவர்கள் பேசிய வீடியோ ஆதாரம் எல்லாம் எடுத்து முதலமைச்சருக்கு பகிரவும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.