பேரறிவாளன் விடுதலையை கண்டித்து போராட்டம்.. காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம்!!

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறப்போராட்டம் நடைபெற்றது.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து போராட்டம்.. காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம்!!

சென்னை சந்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில், நடைபெற்ற போராட்டத்தில் வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு காங்கிரசார் அறப்போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் தியாகி அல்ல, ஒரு பயங்கரவாதி என சாடினார்.

பயங்கரவாதியை கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்திற்கு நேற்று கருப்பு நாள் என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், பேரறிவாளன் விடுதலைக்கு அதிருப்தி தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தப்பட்டது.

பேரறிவாளன்  விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாயில் துணி கட்டி பதாகைகளுடன் அறப்போராட்டம் நடத்தினர்.

இதேபோல் மதுரை, கும்பகோணம் மாநகரிலும், பேரறிவாளன் விடுதலையை கண்டித்து  காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.