நீட்தேர்வு: தொடர்கதையாகும் மாணவர்களின் தற்கொலை- ஓவியர் ரஞ்சன் வேதனை

நீட்தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்த சமூக ஆர்வலர் ஓவியர் ரஞ்சன் தெரிவித்துள்ளார். 

நீட்தேர்வு: தொடர்கதையாகும் மாணவர்களின் தற்கொலை-  ஓவியர் ரஞ்சன் வேதனை

நீட்தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பிரத்தியேக பேட்டி அளித்த சமூக ஆர்வலர் ஓவியம் ரஞ்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், நீட் தேர்வின் அச்சத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்கின்றது. கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு  எழுதுவதற்கு முன்னரே தனுஷ் என்ற மாணவர் தேர்வின் அச்சத்தினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேலும் இன்று காலை கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு எழுதியபின் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

இதுபோன்ற மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் அவர்களின்  பெற்றோர்கள் மட்டுமே முற்றிலும் காரணமாக அமைகின்றனர்.. தங்களின் ஆசைகளை குழந்தைகள் மீது திணிப்பது அவர்களை மிகவும் மன உளைச்சலுக்கு கொண்டு செல்கிறது.. உலகில் மருத்துவ படிப்பு மட்டுமே இல்லை மருத்துவம் சார்ந்த படிப்புகள் வேறு படிப்புகள் என்று பல்லாயிரக்கணக்கான படிப்புகள் நாட்டில் உள்ளது.. எனவே மருத்துவ படிப்பிற்கு மட்டுமே மாணவர்களை தயார்படுத்தும் எண்ணத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும்.. பெற்றோர்கள்தான் தங்களின் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை கொடுத்து அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்..அதற்கு மாறாக பெற்றோர்கள் குழந்தைகளை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு வழிவகை செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்