ஆசிரியர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி: ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம் ...

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக்கூறி, மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 

ஆசிரியர் பாலியல்  தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி: ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம் ...

கோவை உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி பொன் தாரணி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொன் தாரணி, மாற்றுச் சான்றிதழ் பெற்று கொண்டு வேறொரு தனியார் பள்ளியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பொன் தாரணி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பொன் தாரணி, முன்பு பயின்ற தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி  தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், வேறு பள்ளிக்கு பெற்றோர் மாற்றியதும் தெரியவந்ததுள்ளது.  

இந்நிலையில் மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.