ஆபத்தான நிலையில் ஓடையை கடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்...வீடியோ வைரல்

கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே  மாணவ மாணவிகள் ஆபத்தான நிலையில் ஓடையை கடந்து  பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது 

ஆபத்தான நிலையில் ஓடையை கடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள்...வீடியோ வைரல்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஏரிகள் கிணறுகள்,குளங்கள்,ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது, இந்த நிலையில் ரிஷிவந்தியம் அடுத்த தாங்கள் கிராமத்தில் பெய்த கன மழையினால் ஏரி தண்ணீர் முழுவதும் வெளியேறி ஓடை வழியாக அதிகமாக செல்கிறது.

இந்தநிலையில்  தாங்கள் கிராமத்தில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக, அந்த கிராமத்தில் இருக்கும் ஓடையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில் பள்ளிக்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டியும், ஓடையை தாண்டி செல்வதற்கு சிறு பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.