போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி...

ஆரணி அருகே போதிய பேருந்து வசதியில்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி...

திருவண்ணாமலை | ஆரணி அடுத்த கண்ணமங்கலம் மற்றும் கொங்கராம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்தும் தினமும் பள்ளி கல்லூரி பயில வேலூர் மாநகருக்கு காலையில் செல்வதும் மாலையில் பின்னர் வீடு திரும்பும் வழக்கமான ஒன்று.

மேலும் படிக்க | அரசு பள்ளி மாணவியரின் பரிதாப நிலை... ஷூ கூட இன்றி கிரிக்கெட் விளையாடிய அவலம்...

அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும் கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் செல்லும் நகர பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் தினமும் பயணித்து வருகின்றனர்.

தங்களுடைய பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லும்போது இப்படி பயணிப்பதை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் தினமும் வீடு திரும்புவதற்குள் வயிற்றில் புளியை கரைத்தால் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்க | நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சைகை மொழியில் அஞ்சலி...

இவற்றையெல்லாம் தடுக்க திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும், கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் பள்ளி கல்லூரி வேலைகளில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

மாணவர்களின் கல்வியின் நலனுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் அரசு நடவடிக்கை எடுத்து போக்குவரத்து துறை கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்களை காணும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | திமுக தேர்தல் வக்குறுதி புதுமைப்பெண் திட்டம்: மாதந்தோறும் 1000 உதவித்தொகை ..... மகிழ்ச்சியில் மாணவிகள்