இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருப்பதால் பயிற்சி அளிக்கப்படுகிறது: ஓபிஎஸ் அறிக்கைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி...

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருப்பதால், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருப்பதால் பயிற்சி அளிக்கப்படுகிறது: ஓபிஎஸ் அறிக்கைக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி...

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்து வரும் திமுக அரசு, நீட் தேர்வுக்கான பயிற்சிகளை அளித்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வும், அதற்கான பயிற்சி வகுப்புகளும் யார் கொண்டு வந்தது என்பதும், எந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது எனபதும் மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய கடந்த ஆட்சியில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில், நீட் தேர்வு அமலில் இருப்பதால், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.