பஸ் ஓட்டும்போது வலிப்பு நோயால் பாதிப்பு... பஸ்ஸை ஓரங்கட்டி பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்...

திருத்தணியில் ஓடிக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு வலி, சாதுரியமாக பஸ்சை ஓரங்கட்டிய ஓட்டுநர் பேருந்தில் இருந்த முப்பத்தி ஒரு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பஸ் ஓட்டும்போது வலிப்பு நோயால் பாதிப்பு... பஸ்ஸை ஓரங்கட்டி பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா அருகில் இருந்து சென்னை செல்லும் சாலையில் இன்று திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்து ஏசி பேருந்து, ஓட்டுநர் ஹேமநாதன் ஓட்டிச்சென்றார். திடீரென அவருக்கு வலிப்பு வலி வந்ததன் காரணமாக மயக்க நிலைக்கு செல்லும் முன்பு அவர் சாலையோரம் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு லோடு ஆட்டோ மீது மோதி ஓரமாக பேருந்தை நிறுத்தினார்.

இதனால் பஸ்சில் இருந்த முப்பத்தி ஒரு பயணிகள் திருப்பதி, திருத்தணியில் இருந்து சென்னைக்கு செல்லுபவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே டிரைவருக்கு வலிப்பு நோய் வந்தது. இதனால் சாலையில் இருந்த வாகனங்கள் மீது மோதியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுவும் அரசு விரைவு பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே வலிப்பு வலி வந்தும் சாலையில் யார்மீதும் எந்த உயிர் சேதமும் ஏற்படுத்தாமல் சாதுரியமாக பஸ்ஸை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரைப் பாராட்டினர். உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அழைத்து சென்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் டிரைவர் சிகிச்சை பெற்று வருகிறார்.