திருப்பூரிலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...

திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து பொதுமக்கள் அதிச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரிலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு... அதிர்ச்சியில் பொதுமக்கள்...

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கோர தாண்டவமாடிய கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை மருத்துவமனையில் கடந்த 13 ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 என்று அழைக்க கூடிய பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தாருக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில்,

கடந்த 13 ந்தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு எச்1.என்1 உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக இருப்பதுடன் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றார். 

கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் மற்றுமொரு சோதனையாக பன்றிக்காய்ச்சல் பரவுவது திருப்பூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.