மும்மதமும் இணைந்த அதிகாரிகளுக்கு எதிரான பேரணி!!!

தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மாடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர், பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்மதமும் இணைந்த அதிகாரிகளுக்கு எதிரான பேரணி!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 69 வது வார்டு மாடம்பாக்கம்  சீரடி சாய் நகரில் 500 மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும்  மக்கள், தங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கு மூடி அமைத்து தருமாறும், அதே போல பொது கிணற்றை தூர்வாறுதல், பூங்காக்களை சுத்தம் செய்து  தருமாறும் பலமுறை தாம்பரம் மாநகராட்சி மற்றும் மண்டல சேர்மன் இந்திரனிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக நடந்து சென்றனர். தாம்பரம் மப்பேடு செல்லும் பிரதான சாலையில் ஒன்றிணைந்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் கவனம் ஈர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாடப்பாக்கம் ஸ்ரீ சீரடி சாய் நகர் பகுதிகளை மட்டும் தாம்பரம்  மாநகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள். இதில், இந்து, முஸ்லின், கிருஸ்துவர் என மும்மதமும் இணைந்து போராடியது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.