தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடா் இன்றுடன் நிறைவு!!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடாில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனா்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பேரவை தொடங்கியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், சிவசங்கர், எ.வ.வேலு, மனோ தங்கராஜ், சேகர்பாபு, பொன்முடி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் பதிலளித்து பேசவுள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக, 2022ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்யவுள்ளாா். தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை இரண்டாம் திருத்தச் சட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளாா். 

தொடா்ந்து தமிழ்நாடு இயக்க ஊர்திகள் வரிவிதிப்பு திருத்தச் சட்ட முன்வடிவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார். பின்னர் 2023 - 24ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்கவுள்ளாா். 

இறுதியாக சட்ட முன்வடிவுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அறிமுகம் செய்யப்படும். தொடா்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.