"தமிழக ஆளுநர் நீட்டுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" அன்புமணி எச்சரிக்கை!

"தமிழக ஆளுநர் நீட்டுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" அன்புமணி எச்சரிக்கை!

"தமிழக ஆளுநர் நீட்டுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை உணர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

நீட் மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் சொல்வது தவறானது. அவரது சொந்த கருத்தை இங்கு திணிக்கக் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். இது மக்களுடைய விருப்பம். எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்காது என ஆளுநர் பிரதிபலிக்க கூடாது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேவையில்லை என தெரிவிக்கிறார்கள் எனக் கூறிய அவர், ஆளுநர் சொல்லியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மேலும், காசு இருந்தால் மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என தெரிவித்த அவர், 7.5% இட ஒதுக்கீடு இல்லை என்றால் அரசு பள்ளி மாணவர்கள் விரல் விட்டு எண்ணும் வகையில் தான் இருந்திருப்பார்கள் என தெரிவித்தார்.

நீட் ஏழை பிள்ளைகளுக்கு எதிரானது என குறிப்பிட்ட அவர், ஆளுநர் இது போன்ற பேச்சை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிக்க:உலக திருநங்கை அழகி போட்டி; 3வது இடத்தை பிடித்த சென்னை அழகி!