”ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் மொழி” - அமைச்சர் விளக்கம்

”ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் மொழி” - அமைச்சர் விளக்கம்

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சிபிஎஸ்சி பள்ளியாக இருந்தாலும் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்வதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


கோவை தடாகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 350 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் வழங்கினார். 

இதையும் படிக்க : பருவமழையை எதிர்கொள்ள நீலகிரி தயார்: ஆ. ராசா பேச்சு!

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தனியார் பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர், எந்த பள்ளிக்குச் சென்றாலும் முதலில் தமிழ் ஆசிரியர் யார் என்று கேட்பது வழக்கம் என்று கூறினார். ஏனெனில், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சிபிஎஸ்சி பள்ளியாக இருந்தாலும் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்வதாகவும், தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுத படிக்க, எல்லா வசதியும் தர வேண்டும் என்ற முறையில் செயல்படுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.