”மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி  எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது” - அண்ணாமலை!

”மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி  எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது” - அண்ணாமலை!

மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி  எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ கூடாது என்பதே தமிழக பாஜகவின் நிலைபாடு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.   

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் பாஜக சமூக வலைதள ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி  எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ கூடாது என்பதே தமிழ்நாடு பாஜகவின் நிலைபாடு என்றார். மத்திய பாஜகாவை பொறுத்தவரை எம்.பி.எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே முடிவு செய்துள்ளதாகவும், குறைக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் தொடரும் ரெய்டு...விளக்கமளித்த அண்ணாமலை...!

தேர்தலுக்கு பிறகு குழு அமைத்து எப்படி எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்யப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் 5 பேருக்கு இடம் வேண்டும் என பேசி வருவதாகவும், நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்றால் நிச்சயம் அத்தனை இடங்களை கேட்போம் என கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் கேட்கப்படும் என்பதை பொறுத்து பாருங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செங்கோல் என்பது இந்துக்களின் அடையாளமாக பார்க்க கூடாது என தெரிவித்த அண்ணாமலை, இந்து என்ற மதம் இல்லாத காலத்தில் இருந்து செங்கோல் உள்ளதாக கூறினார். நாடாளுமன்ற கட்டிட விழாவில் அனைத்து மதத்தை சார்ந்த நபர்களும் ஒன்றாக அமர்ந்து பூஜை செய்ததே இந்தியாவின் அடையாளம், ஆனால் அதனை பார்க்க அனைவரும் மறுப்பதாக கூறினார்.

முன்னதாக, மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதால், தென் இந்தியாவின் குரல் நசுக்கப் படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.