டிஜிபிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் கடிதம்...

வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து காவல் அதிகாாிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கடிதம் எழுதியுள்ளாா்.

டிஜிபிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் கடிதம்...

சென்னை | சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொழில்புரிந்து வந்த பெருங்குடியை சேர்ந்த ஜெய்கணேஷ் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஜெய்கணேஷின் மரணம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும்,  குறிப்பிட்ட நபர்களின் கொலைவெறி தாக்குதலால் அகால மரணம் அடைந்ததால் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பப்ஜி விளையாட முடியாததால் தூக்கில் தொங்கிய மாணவன்...

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிறப்புக் குழுக்களை அமைத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இதற்காக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை...

சமீப காலமாக, வழக்கறிஞர்கள் பலர் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அவர்களின் பாதுகாப்பிற்கும், வழக்கறிஞரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், வழக்கறிஞர்கள் தங்கள் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பை உறுதிசெய்யும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை, வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்...