முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து அவருக்கு பொறாமை தான் - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

தமிழக மக்களின் நலன்சார்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து அவருக்கு பொறாமை தான் - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் பல்வேறு தேவைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்திருப்பதாக கூறினார்.

டெல்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்புகளை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி பொறாமைபடுவதாகவும் சாடினார்.

மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் சட்டம் ஒழுங்குகள் சீராக இருப்பதாகவும் ஹிஜாப் உள்ளிட்ட எந்த விவகாரமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.