தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

தீண்டாமையும், வேறுபாடும் குறித்து ஹிந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது என தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் RN.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், சிவகுலத்தார் பண்பாட்டு கலாச்சார நாடகம், சிவகுலத்தார் பறையாட்டம், ஒப்பேரி,நாதஸ்வரம் தவில், சிவ வாத்திய கச்சேரி ஆகியவை நடந்தது. 

இதனை கண்டு ரசித்தார். பின்னர் அவர் பேசுகையில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோவில் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ஒரு ஊரை உருவாக்கும் போது நாம் முதலில் உருவாக்குவது கோவிலை தான். அதன் பிறகு தான் வீடுகள் மற்றவை எல்லாம் உருவாக்கிறோம். கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலம் அல்ல. அது நமது கலாச்சாரத்துடனும், வாழ்க்கை முறையோடு பின்னி பிணைந்தது. நமது நாட்டின் கட்டமைப்புகள் மன்னார்களால் உருவாக்கப்படவில்லை. ரிஷி, துறவிகளால் வடிவமைக்கப்பட்டது. தர்மம் மற்றும் அறம் சார்ந்தது தான் நமது பாரத நாடு எனக் கூறினார். 

சுமார் 8,500 நுாற்றாண்டுகளுக்கு முன்பாக, நெறிமுறைகள் குறித்து ரிக் வேதம் புனித நுால் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று முக்கிய கோட்பாடுகள் உள்ளன. அதில் ஆதி பகவன் என்ற அழைக்கப்படும் பரமேஸ்வரனால், உலகம் உருவாக்கப்பட்டது. பின்னர், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்திலும் பரமேஸ்வரன் உள்ளார். அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது தான் ஒரே குடும்பம்.  ஒவ்வொரு விதமான காலச்சாரம்,சம்பிரதாயம் உள்ளது. ஒரு மரத்தில் இருக்கும் கிளைகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும், அவைகள் எல்லாம் ஒரு புள்ளியில் இருக்கிறது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நமது பாரதம் கன்னியாகுமரி கடல் முதல் இமயமலை வரை ஒரே குடும்பமாக உருவாகியுள்ளது என தெரிவித்தார்.  

பாரத்தின் வலிமையாக ஹிந்து தர்மம்தான் அமைந்துள்ளது. இதில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் இல்லை.  இந்தியாவின் மீது பலரும் படையடுத்து, பாரத தர்மத்தை பலவீனப்படுத்த, ஒழிக்க வேண்டும் என நினைத்தனர். ஆனால், நமது டி.என்.ஏ.,விலும், உடலில் இருந்ததால், அழிக்க முடியவில்லை. ஹிந்து தர்மத்தை, ஆங்கிலேயார்கள் உள்ளிட்ட பலராலும் அழிக்க முடியாமல் போனாலும், பல பாதிப்புகளை உருவாக்கி விட்டனர். காந்தி அவர்கள் கூறியது போல, நமது காலச்சாரம், பண்பாடு எப்போது மறுமலர்ச்சி பெறுகிறேதோ அப்போது தான் உண்மையான சுதந்திரமாகும் எனக் கூறினார்.  

பொருளாராத்திலும், அறிவியல் போன்றவற்றில் வளர்ந்து இருந்தாலும் கலச்சாரத்தில் மறுமலர்ச்சியை மறந்து விட்டோம்.  நமது கலச்சாரத்தின் வளர்ச்சி எப்போது இருக்குமோ. அப்போது தான் உண்மையான வளர்ச்சி பெற்ற நாடாக நமது நாடு மாறும் எனக்கூறிய அவர், உலக தலைவராக பிரதமர் மோடி வளர்ந்துள்ளார். பொருளாரத்தில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். விரைவில் மூன்றாவது நாடாக வர உள்ளோம். உலகளவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இந்தியாவில் தான் உள்ளது. உலகத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது. ஜாதி,மத வேறுபாடு இருந்தாலும், நமது பாரத குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றாலும், அது நமது நாட்டிற்கான பிரச்சனையாக பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு ஹிந்து தர்மத்தை அழிப்பதற்காக பேசி வருகிறார்கள். என்ன செய்தாலும் ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது. அதில் அவர்கள் வெற்றி பெற போவது இல்லை. ஹிந்து தர்மம் நமது இதயத்தில் இருக்கிறது. ஹிந்து தர்மம் அரசியல் அமைப்பு சட்டத்தில் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. சிலர் அரசியல் அமைப்பு சட்டத்தை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது படிக்காமல் இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறாக பேசி வருகிறார்கள்

மேலும், ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவார்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது இந்தியாவை பிளவுப்படுத்த வேண்டும் என்பது தான்.தீண்டாமையும், வேறுபாடும் குறித்து ஹிந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள்ளாக நுழைய கூடாது என கூறுவதை தமிழகத்தில் தான் பார்க்கிறேன். ஜாதி அடையாளங்கள் அணிந்து கொள்ளுவர்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். அவர்களுக்காக ஜாதி கட்சியினர் நிறையாக இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன். நமக்கு தேவை சமூக மாற்றங்களும், பொது சிந்தனையும் தான். இந்த தீண்டாமை ஏற்புடையது அல்ல. நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா