அலங்கார மீன்கள் விற்பனை, இந்தியாவில் 2வது இடத்தில் தமிழ்நாடு...! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...!!

அலங்கார மீன்கள் விற்பனை, இந்தியாவில் 2வது இடத்தில் தமிழ்நாடு...! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...!!

அலங்கார மீன்கள் வளர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 1.50 கோடி மதிப்பீட்டில் மீன்வள பயிற்சி கட்டிடம் மற்றும் மீன் குஞ்சுகள் ஆய்வக வளாகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

சென்னை  மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலை கழக வளாகத்தில் மீனவர்களின் திறன் மேம்பாட்டு தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் செயல்முறை விளக்க பயிற்சிகள் வழங்கும் வகையில் ரூ 99.15 லட்சம் மதிப்பீட்டில்  பயிற்சி அலுவலகம், பயிற்சியாளர்கள் தங்குமிடம் மற்றும் 3,882 சதுர அடி கொண்ட பயிற்சி கூட கட்டிடம் மற்றும் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் 1,803
சதுர அடி கொண்ட மீன் குஞ்சு தர நிர்ணய ஆய்வகம் ஆகியவை  கட்டப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சுகுமார்  தலைமையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து நீருயிரி வானவில் விழா கண்காட்சி சின்னத்தை வெளியிட மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பெற்றுக் கொண்டார். 

க்ஷஇதில் பேசிய  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு அந்த கல்லூரி மூலம் மீன்கள் தரமாக வளர்ப்பது நோயில்லாத மீன் குஞ்சுகளை வளர்ப்பது ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் பணிகளை தமிழ்நாடு முழுவதும் பல்கலைகழகம் செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், அலங்கார மீன்கள் வளர்ப்பது மிகப்பெரிய தொழிலாக உள்ளது. இதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் தொகுதி கொளத்தூரில் 2000 நபர்கள் அலங்கார மீன்கள் விற்பனை செய்கின்றனர் எனக் கூறினார்.

பின்னர்  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, "தமிழ்நாடு முதலமைச்சர்  மீன்பிடி தடைக்காலத்தில் ரூபாய் 5000 வழங்கியதை 6000 ஆக உயர்த்தி வழங்கினார். தற்பொழுது மீனவர்கள் தடைக்காலத்தில் 8000 கேட்கிறார்கள் இதனை முதலமைச்சர் கண்டிப்பாக வழங்கவார்" எனக்கூறினார். 

படகுகள் வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும் ஆனால்  கடினமாக இருப்பதாக உலகின் உரிமையாளர்கள் தெரிவித்ததால் அதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்தால் போதும் என்ற  திட்டத்தை தந்திருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் தொக்காராமன், கல்லூரி  முதல்வர் ஜெயஷகீலா, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரன் ஆஸ்னா மெறிஷியா,  மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.