பேருந்துகளை கண்டம் செய்யும் வயதை அதிகரித்தது தமிழக அரசு.! 

பேருந்துகளை கண்டம் செய்யும் வயதை அதிகரித்தது தமிழக அரசு.! 

அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தின் வயதை அதிகரித்து உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அரசு விரைவு பேருந்துகளை 3 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் சாலையில் பயன்படுத்தலாம் என்றிருந்ததை இனி வரும் காலங்களில் 7ஆண்டுகள் அல்லது 12லட்சம் கிலோமீட்டர் என மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் மற்ற அரசு பேருந்துகளை 7லட்சம் கிலோமீட்டர் அல்லது 6 ஆண்டுகள் சாலையில் பயன்படுத்தலாம் என்றிருந்ததை இனி வரும் காலங்களில் 9ஆண்டுகள் அல்லது 12லட்சம் கிலோமீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய சாலை வசதிகள் காரணமாகவும், நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், நவீன வடிவமைப்பு காரணமாகவும் இம்மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.