இந்தியாவில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு... அமைச்சர் பொன்முடி பெருமிதம்...

இந்தியாவில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு... அமைச்சர் பொன்முடி பெருமிதம்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வியுடன் பொது அறிவையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பட்டமளிப்பு விழா:

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு கல்விப்புலக்கட்டிடத்தில் நடைபெற்றது.  இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பேராசிரியர் கிருஷ்ணன் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ந.பஞ்சநதம் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார்.  தொடர்ந்து 406 மாணவர்களுக்கு நேரடியாகவும், 1,66,516 பேருக்கு In-Absentia  முறையிலும் பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 

விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,

விரைவில் ஆடிட்டோரியம்:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆடிட்டோரியம் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் எனவும் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.  மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆரம்பகல்வி மற்றும் உயர்கல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எனவும் தமிழ்நாடு கல்வியில் முன்னோடியாக இருந்து வருகிறது எனவும் கூறினார்.

கல்வி திட்டக்குழு:

தமிழகத்துக்காக கல்வித்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். காலை சிற்றுண்டிக்கு அரசு நடவடிக்கை எடுத்து செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தை பார்த்து தான் பல்வேறு திட்டங்களை பலர் செயல்படுத்தி வருகின்றனர்.

நானும் ஒரு ஆசிரியர்:

நானும் ஒரு ஆசிரியர் தான். 17 வருடம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார் வந்தேன்.  பல்வேறு பட்டத்தாரிகளை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.  தமிழகத்தில் ஆரம்ப கல்வியாக இருந்தாலும், உயர்க்கல்வியாக இருந்தாலும் அவற்றை மேம்படுத்த தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.

தமிழகத்தின் திட்டங்களை முன்வைத்து தான் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்சார்ந்த கல்வியை உருவாக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கல்வி நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

வானவில் மன்றம்:

வானவியல் மன்றத்தின் நோக்கமே அறிவியலை வளர்க்க தான். நான் படிக்கும் போது உயர்கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 15 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி. தமிழகத்தில் அண்ணா, கலைஞர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பெண் கல்வி அதிகரித்துள்ளது. 

பெண்கள் ஆதிக்கம்:

முதுநிலை எம்.எட்.படிப் பில் அதிகளவு பெண்கள் தான் படிக்கிறார்கள். எம். பில்.படிப்பிலும் பெண்கள் தான் அதிகம். தற்போது பெண் கல்வி அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் நம் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் அனைத்து மாநிலத்துக்கும் முன்னோடி. கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி சிறந்த மாநிலம். 

பெண்கள் மீதான நம்பிக்கை:

கலைஞர் இருக்கும் போது ஆரம்ப பள்ளியில் பெண் ஆசிரியர்களை நியமித்தார். ஆசிரியர் படிப்பு படித்தால் பள்ளிக்கூடத்திற்கு பாடம் நடத்துவது மட்டும் கிடையாது. பள்ளிக்கூடம் உருவாக்கி பள்ளி மாணவர்கள் படிக்க வைக்கின்றது தொழில் கூடம் செய்லாம். ஆசிரியராக பணியாற்றுவது என்பது சாதாரணம் கிடையாது. இளமையிலேயே கல். நீங்கள் மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் கற்பிக்காமல் பொது அறிவையையும் கற்றுக்கொண்டு தான். 

புதுமைப் பெண் திட்டம்:

பெண்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம். நானும் அரசு பள்ளி மாணவர் தான். மாணவர்களுக்கு மொழி அறிவை ஊட்ட வேண்டும். காமராஜர் இருக்கும் போது 5 கி.மீட்டருக்கு ஒரு பள்ளி என இருந்தது. கலைஞர் 3 கி.மீட்டருக்கு ஒரு பள்ளி என கொண்டு வந்தார். வருங்கால சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். மிக முக்கியமான பொது அறிவையையும் கற்றுக்கொடுக்க வேண்டும். 

ஆரம்ப கல்வி:

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி ஆரம்ப கல்வியை பொறுத்து தான் இருக்கிறது. ஆரம்ப கல்வியை பொறுத்து தான் உயர்க்கல்வி இருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை பெண் கல்வியை மேம்படுத்த தான் என்றார்.

இதையும் படிக்க:    அடிமேல் அடிவாங்கும் காங்கிரஸ்... ராஜஸ்தானில் மீண்டும் எழுந்த சர்ச்சை....