தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழையாம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழையாம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மிதமான மழை பெய்ய வாய்ப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நாளை மறுநாளும்.. நீலகிரி, கோவை, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் 27ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை?

சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.