காஷ்மீரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டி...14 பதக்கங்களுடன் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு!

காஷ்மீரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டி...14 பதக்கங்களுடன் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு!

காஷ்மீர் குல்மார்க்கில்  நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் 14 பதக்கங்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது

காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில், இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்களின் ஐஸ் ஹாக்கி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மொத்தமாக 14 பதக்கங்களை பெற்றிருக்கின்றனர். குறிப்பாக  ஐஸ் ஹாக்கி போட்டியில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 8 வீரர்கள் கலந்து கொண்டு 9  பதக்கங்களை வென்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதையும் படிக்க : சென்னையில் 3ம் நாளாக தொடரும் ஐடி ரெய்டு...!

இந்தக் கேலோ இந்தியா போட்டியானது பனிக்காலங்களில் மட்டும் நடைபெறக்கூடிய போட்டியாகும்.  ஐஸ் ஹாக்கி போட்டி தொடர்பாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத தமிழ்நாட்டில் இருந்து ஒன்பது பதக்கம் வாங்கி இருப்பது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், இந்த போட்டியை ஊக்கப்படுத்துவதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயிற்சியாளர் வெங்கடேஷ் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் நான்கு நாட்களாக நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்டு பதக்கம் பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளருக்கும் மற்றும் பெற்றோருக்கும் நன்றி எனவும் வீராங்கனைகள் தெரிவித்தனர்.