தமிழக உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் ஓய்கிறது...

தமிழக உள்ளாட்சி தேர்தல் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி, தொடர்பில்லாத நபர்கள் வெளியேற, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், முதற்கட்டமாக நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. அதன்பின், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல், 6ம்தேதி நள்ளிரவு 12 மணிவரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார் களை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே களத்தில் உள்ள வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.