தைரியம் இருந்தால் கால் வையுங்கள்...! தஞ்சை விவசாயிகள் சவால்...!!

தைரியம் இருந்தால் கால் வையுங்கள்...! தஞ்சை விவசாயிகள் சவால்...!!

தைரியம் இருந்தால், தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க கால் வையுங்கள் விடுத்துள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள் என சவால் விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்காவில் வடசேரி, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவகோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி விவசாயிகள் கடும் கொந்தளிப்பாகி உள்ளனர். 

முப்போகம் விவசாயம் நடைபெறுகிற இந்த பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கி இருப்பதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என  விவசாயி கக்கரை சுகுமாரன் தெரிவித்துள்ளார். மேலும அவர் கூறுகையில் "நாங்கள் போராடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு பெற்று உள்ள நிலையில், மத்திய அரசின் நிலக்கரி எடுப்பு அறிவிப்புக்கு மாநில அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து "தைரியம் இருந்தால் நிலக்கரி எடுக்க கால் வையுங்கள் என சவால் விடுத்தவர். உயிரை கொடுத்தாவது இத்திட்டத்தை தடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார் .