"2030 -க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலை இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"2030 -க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலை இலக்கு" -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார நிலையை எட்டுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்திருக்கிறார். 

ஜப்பான் நாட்டை சேர்ந்த ‘ஹிட்டாச்சி எனர்ஜி’ நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம் சென்னை போரூரில் நிறுவப்படுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு, ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் இதன் மூலம் 2 ஆயிரத்து, 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். அத்துடன், 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார நிலையை எட்டுவதே தமிழ்நாடு அரசின் இலக்கு என்று முதலமைச்சர் சூளுரைத்தார்.  

முன்னதாக, சென்னை தீவுத்திடலில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2 திருநங்கைகள் மற்றும் 148 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மற்றும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வழங்கினார். 

இதையும் படிக்க    | காவிரி விவகாரம் : அதிமுக சாா்பில் நாளை ஆா்ப்பாட்டம்...!