நிலத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல்... ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் மீது புகார்... கர்ப்பிணி மனைவியுடன் தர்ணா போராட்டம்...

ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் நிலத்தை பறித்துக்  கொலை மிரட்டல் விடுத்ததாக கர்ப்பிணி மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.

நிலத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல்... ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் மீது புகார்... கர்ப்பிணி மனைவியுடன் தர்ணா போராட்டம்...

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஊர் பழையபள்ளி தெருவில் மன்னர் காலத்தில் இருந்து நான்கு தலைமுறையாக வசித்து வந்த குடும்பத்தினர் பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து சென்று திரும்பி வந்த போது தங்களின் நிலத்தை குமரிமாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அபகரித்து வைத்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி கர்ப்பிணி மனைவியுடன் பாதுகாப்பு கேட்டு தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஊர் பழைய பள்ளி தெருவை சேர்ந்த ஜெஹபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான இடத்தை அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். அவரது மகன் சதாம் உசேன் அவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான பூர்வாங்க இடத்தில் வீடு இடிந்த நிலையில் உள்ளதால் தற்காலிக வேறு தெருவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தங்களின் சொந்த வீட்டை குமரிமாவட்ட ஜமாத் கூட்டமைப்பு தலைவர். அப்துல் லத்தீப் என்பவர் அபகரித்து வைத்துக்கொண்டு தங்களை மிரட்டி அடிஆட்களை வைத்து ஒருலட்சம், இரண்டு லட்சம் தருகிறேன் வாங்கி கொண்டு சென்று விடுங்கள் என பேரம் பேசி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

தங்களின் நிலம் தங்களின் உரிமை அதை அபகரித்து வைத்து கொண்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களின் இடத்தை மீட்டு தரவேண்டும் என கூறி கர்ப்பணி மனைவியுடன் தங்களின் சொந்த இடத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக ஆர்டிஓ தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.