டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு!

டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு!

ஈரோடு திண்டல் அருகே டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.

ஈரோடு திண்டல் அருகே உள்ள சக்தி நகர், மூன்றாவது வீதியில் வசித்து வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான சச்சிதானந்தம் என்பவரது  வீட்டிலும், அவருக்கு சொந்தமான கே.எஸ்.எம். டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் கடந்த மாதம் 26ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டதோடு, வங்கி லாக்கர்கள் ஆவணங்கள் உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று காலை சச்சிதானந்தத்தின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பெங்களூரை சேர்ந்த 4 அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர், கடந்த முறை நடைபெற்ற வருமான வரிச்சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையை ஒட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நண்பரான சச்சிதானந்தம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோனிலிருந்து மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு விநியோகிக்கும் வாகன போக்குவரத்து ஒப்பந்ததாரராக இருப்பதாலும், சச்சிதானந்தம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களை வைத்து வழக்கு பதிவு செய்து சச்சிதானந்தம் கைது செய்யபடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!