"டாஸ்மாக் கடைகளை மூடினாலும் வருவாய் ஈட்ட முடியும்" அண்ணாமலை யோசனை!

"டாஸ்மாக் கடைகளை மூடினாலும் வருவாய் ஈட்ட முடியும்" அண்ணாமலை யோசனை!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை எல்லாம் மூடிவிட்டு, தமிழக அரசின் வருவாயை ஒரு லட்சம் கோடியாக ஈட்டுவதற்கு வரும் 14ஆம் தேதி பிஜேபி சார்பில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஓசூர் பொதுக்கூட்டத்தில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மத்திய அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிஜேபியின் தமிழக தலைவர் கே அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் பொழுது, ஜல்லிக்கட்டு விஷயத்தில் நன்றி சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி என்ற தலைவருக்கு மட்டும் நன்றி சொல்ல தகுதி உள்ளது. ஆனால் திமுகவினரோ அவர்களது தலைவருக்கு நன்றி சொல்வதாக கூறிக்கொண்டு உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், திமுக தலைவருக்கு "பால் மாட்டின் காம்பிலிருந்து வருகிறதா? அல்லது கொம்பில் இருந்து வருகிறதா? என்பதே தெரியாது. அவர் ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்ன தீர்ப்பு வாங்கி சாதனை படைத்தார் என விமர்சித்துள்ளார். ஆனால், பிஜேபியோ டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுங்கள் என்று கூறி வருவதாக கூறிய அவர் தற்பொழுது விஷச் சாராயத்தில் 22 பேர் இறந்தது இறப்பு அல்ல, அது கொலை என பேசியுள்ளார். மேலும், இதில் முதல் குற்றவாளி முதலமைச்சர், இரண்டாம் குற்றவாளி செந்தில் பாலாஜி என குறிப்பிட்ட அவர், இவர்கள் இருவரும் வேண்டுமென்றே 22 பேரை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மீண்டும் தென்னை மற்றும் பனைமரக் கள்ளு ஆகியவற்றை கொண்டு வரக்கோரிய அவர் வருகின்ற 14 ஆம் தேதி மாநில அரசுக்கு பாஜக தயாரித்துள்ள வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்தார். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பனைமரம் தென்னை மரத்தின் வாயிலாக எப்படி அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!