தேர்தல் அறிக்கையின் படி பணி நியமனம் வேண்டும்...TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!

தேர்தல் அறிக்கையின் படி பணி நியமனம் வேண்டும்...TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு குறித்த அரசாணையை நீக்குதல் , திமுக தேர்தல் அறிக்கையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டுதல், பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கக் கோருதல் ஆகிய மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்... ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

தீர்வு கிடைக்காதவரை போராட்டம் நிற்காது:

போராட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகிகள், கடந்த பத்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததால் மாணவர்களின் கல்வித் தரம் மலிந்துவிட்டதாகவும், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.