முதலமைச்சரின் நடவடிக்கையால் கோயில் யானைகள் புத்துணர்வுடன் இருக்கிறது - அமைச்சர் சேகர்பாபு!

முதலமைச்சரின் நடவடிக்கையால் கோயில் யானைகள் புத்துணர்வுடன் இருக்கிறது - அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கையால் கோயில் யானைகள் புத்துணர்வுடன் குதூகலத்துடன் உள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மாநில கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், கோயில் யானைகளுக்கு புத்துணர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

இதையும் படிக்க : நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் மொத்தம் 29 கோயில் யானைகள் உள்ளதாகவும், சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டவுடன் வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும், கோவில் யானைகளுக்கென்று குளியல் வசதி, நடைப்பயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காலை, மதியம், இரவு என்று சத்தான உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் கோயில் யானைகள் புத்துணர்வுடனும் குதூக்குலத்துடனும் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்