90% நில எடுப்பு பணி முடிந்த பின்பே டெண்டர்...அமைச்சர் உறுதி!

90% நில எடுப்பு பணி முடிந்த பின்பே டெண்டர்...அமைச்சர் உறுதி!

பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை, பாலம் என அனைத்து பணிகளுக்கும் 90 சதவீதம் நில எடுப்பு பணி முடிந்தபின்பே டெண்டர் விட வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய போளூர் எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, போளூரில் ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த காலங்களில் நிலை எடுப்பு பணி முடிவதற்கு முன்பாகவே டெண்டர் விட்டதால்தான், பல இடங்களில் பணிகள் முடிய கால தாமதமானதாக தெரிவித்தார். 

இதனால் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளக்கூடிய சாலை, பாலம் என அனைத்து பணிகளுக்கும் 90% நிலஎடுப்பு பணிகள் முடிந்த பின்பாகவே டெண்டர் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், இதனால் வரும் காலங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்படக்கூடிய பணிகளில் கால தாமதம் ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்.