பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகளுக்கான டெண்டர் அறிவிப்பு!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் சிவகங்கர் தெரிவித்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023 முதல் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மகா சபைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவு என்பதை சுட்டிக் காட்டினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்து அறிவிப்பார் என்றார். மேலும், பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துக்ளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்துள்ளார்.