கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பயங்கர மோதல்: ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டதால் பரபரப்பு...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பயங்கர மோதல்:  ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டதால் பரபரப்பு...

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் தேவக்கோட்டை பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நிர்வாகி ஒருவர் காரைக்குடி எம்.எல்.ஏ தனிச்சையாக செயல்படுவதாகவும், கட்சி ஆலோசனையை கேட்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும், கட்சி இரு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாகவும், பதவியில் இருப்பவர்கள் நிர்வாகிகளின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பதில்லை என்றும் கூச்சலிட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி குறுக்கிட்டு நிர்வாகிகளை சமாதானம் செய்து கார்த்தி சிதம்பரத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து, கட்சியின் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. ஒருவருக்கு ஒருவர் நாற்காலிகளை கொண்டு தாக்கி கொண்டதில் ஒரு சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.