1,025 ஆண்டுகள் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

திருச்சியில் 1,025 ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

1,025 ஆண்டுகள் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

திருச்சி மாநகர் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் 1,025 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு வைபவம் 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமானது காந்திமார்க்கெட்டிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமன்றி பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு நடத்தினர்.