மத்திய அரசின் 8 ஆண்டு காலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை - சீமான்!

மத்திய அரசின் 8 ஆண்டு காலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை - சீமான்!

மத்திய அரசின் 8 ஆண்டு காலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனையல்ல வேதனை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியிருக்கிறார். 

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பாரதிய ஜனதா கட்சியின் பீ டிம் அல்ல மெயின் டீம்  என்றார்.

திமுகவின் ஓர் ஆண்டு  ஆட்சியில் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை அதிமுகவின் பத்தாண்டு ஊழல் குறித்து கேள்வி கேட்பாரா என சீமான் வினவியுள்ளார். மதமோதல்களை தூண்டி தூண்டி நாட்டில் பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது எனறும் சீமான் குற்றம்சாட்டினார்.