எதிர்த்து கேள்வி கேட்டதால் கட்சி நிர்வாகி வேட்டியை உருவிய அ.தி.மு.க.வினர்...

உள்கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை கொறடாவை எதிர்த்து கேட்ட நிர்வாகியை வேட்டி உருவிய அ.தி.மு.க.வினர்.

எதிர்த்து கேள்வி கேட்டதால் கட்சி நிர்வாகி வேட்டியை உருவிய அ.தி.மு.க.வினர்...

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று அதிமுக உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக துணை கொறடா சு.ரவி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் விஜயன் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களிடம் கிளைக் கழக தேர்வுக்கான படிவத்தை வழங்கினர். இதில் ஆற்காடு அடுத்த விசாரம் பகுதியில் ஒரு சாதியினரை பிரித்து நான்கு வார்டுகளுக்கு ஒரு நகர செயலாளர் நியமித்ததை, நிர்வாகி ஒருவர் அதிமுக துணைக்கு ரவியை பார்த்து நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், எங்களுக்குள் சாதி பேதம் இல்லை, நீங்கள் செய்வது தவறானது  என்று கேள்வி கேட்டார்.

இதைக்கேட்ட  ரவி அவரை மேடையிலிருந்து கீழே இறங்குங்கள் என்று கூறினார். நீங்கள் செய்வது தவறு என்று மேலும் மேலும் அந்த நிர்வாகி பேச ஆரம்பித்தார். இதனால் அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கேள்வி கேட்டவரை பிடித்து கீழே தள்ளி இறங்கச் சொல்லி வேட்டி அவிழும்படி இழுத்து தள்ளி அனுப்பி வைத்தனர். இதனால் சற்று நேரம் உள்கட்சி தேர்தலில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது.