எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்...அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்...அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவராக, ஆர்.பி. உதயகுமாரை ஏற்றுக் கொள்ளாததைக் கண்டித்து அதிமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 


சட்டப்பேரவையில் இன்றைய வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர் கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு...!

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வந்துவிட்ட நிலையில், எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமித்துள்ளதை அவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று புகார் கூறிய அவர், எதிர்கட்சியினரின் கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்றும், எதிர்கட்சித் தலைவர்கள் பேசும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றும் புகார் கூறினார்.

மேலும் ஒரு பிரச்சனை குறித்து பேசினால் வேறு பதில் அளிப்பதாக கூறி, அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.