"பொது சிவில் சட்டத்தை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்" ஜெயக்குமார் உறுதி!

"பொது சிவில் சட்டத்தை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்" ஜெயக்குமார் உறுதி!

"பொது சிவில் சட்டத்தை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும்"  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை மலை சீனிவாசனின் 164 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமைச்சர் பதவி என்பது குறிப்பிட்ட துறையை கவனித்துக் கொள்வதற்காக வழங்கப்படுவது. ஆனால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும். ஆளும் திமுகவினர் அமைச்சர் பதவியை ஒரு கவசமாக பயன்படுத்துகின்றனர்  என குற்றம் சாட்டினார். மேலும், இதனை திசைத் திருப்புவதற்காக அதிமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்களை கழக பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவசர கோலத்தில் கடிதங்களை அனுப்பினால், ஆளுநர் கண்ணை கட்டிக்கொண்டா கையெழுத்து போடுவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேனி தொகுதியல் ஓபி ரவீந்தரநாத் பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதி மன்றம் நேற்று அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கட்சிக்கும் ஓபி ரவீந்தரநாத்துக்கும் சம்பந்தம் இல்லை. அதிகமான அளவு தேர்தல் செலவு செய்து மகன் மட்டும் ஜெயித்தால் போதும் என ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார். ஆனால் அதேநேரத்தில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிற தொகுதிகளுக்கு சட்ட மன்ற இடைத்தேர்தல் நடந்தது இதில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், இதற்கு முன்னர் பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது. இந்த ந நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என தெரிவித்தார்.

இதையும் படிக்க:புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு - புதுப்பிக்கப்பட்ட திமுக இளைஞரணி!