சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி இன்று விசாரணை...

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர்களிடம் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.  

சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி  இன்று  விசாரணை...

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா அங்கு படித்து வந்த மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே மாணவிகள் சிலரும் நேரடியாக புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட  அவரிடம் விசாரணை நடத்த  தனிப்படை போலீசார்அங்கு விரைந்தனர். அப்போது  டெல்லியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சிவசங்கர் பாபாவை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது .  

இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்த 5 பள்ளி ஆசிரியையைகளிடம் விசாரணை நடத்துவதற்காக  சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் இன்று நேரடியாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே ஆசிரியைகள் 5 பேரும் தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் இன்று ஆஜராகவில்லை என்றால், அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.