திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக்கோரிய மனு: அவசர வழக்காக நாளை விசாரணை!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக்கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. 

திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக்கோரிய மனு: அவசர வழக்காக நாளை விசாரணை!

அதிமுகவின் கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி.பழனிசாமி ஆகியோர் கூடுதல் மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

அதில், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்பு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.  

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கவும் கூடுதல் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோல், கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்குவதற்கும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

இதனை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்ட நிலையில், அதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அனுமதி அளித்துள்ளார்.