கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இதுவரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வாங்குவதற்காகவும் முதற்கட்டமாக 50 கோடி ரூபாயும் வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவதற்காக  ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள்  மேற்கொள்ள 50 கோடியும் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் ஏற்கனவே ஆணையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41 கோடியே 40 லட்சமும், கரும்பூஞ்சை சிகிச்சைக்காக 25 கோடி ரூபாயும்  ஒதுக்கீடு செய்ய முன்பே ஆணையிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.