'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்...!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்...!

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதையும், படிப்பதையும் உறுதிசெய்யும் விதமாக, ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோடை விடுமுறைக்குப்பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஓவ்வொறு குழந்தையின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதகவும், இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் குழந்தைகள் பிழையின்றி எழுத செய்வதை இலக்காக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.