கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் காரணம் - பழனியாண்டி!!!

கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் காரணம் - பழனியாண்டி!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா, புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர், காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | முன்விரோதம் காரணமாக... சித்திரை திருவிழாவில்

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி சார்பில் அரசின் இரண்டாண்டு சாதனை மலரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். தொடர்ந்து ரூ.122.60 கோடி மதிப்பிலான 442 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 12,734 பயனாளிகளுக்கு ரூ.63.36 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேசுகையில் :கர்நாடகாவில் பாஜக தோல்வியடைந்தது காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய முதலமைச்சர் தான் என குறிப்பிட்டு பேசினார்.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பேசுகையில் :

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறார்.அனைத்திலும் திருச்சியை முதன்மை மாவட்டமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு அதிகாரிகளும் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் போது தான் மக்களுக்கு நன்மைகளை சேர்க்க முடியும். தமிழ்நாட்டில் அதிகமாக ஏழை,எளியவருக்கும் உதவும் மாவட்டமாக திருச்சி விளங்குகிறது.

மேலும் படிக்க | தென் மாநிலங்களை போல வடக்கிலும் பாஜக புறக்கணிக்க சூழல் வரும் - அமைச்சர் பேட்டி

மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். மக்கள் எங்களுக்கான ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.தமிழகத்தில் திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களை என்னிடம் வழங்கி உள்ளார்கள் மிகச் சிறந்த மாவட்டமாக இதை மாற்றுவது எனது கடமை.தமிழக முதலமைச்சர் உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது ஒன்று மட்டுமே உங்களது அன்பையும் ஆதரவை மட்டும் எப்போதும் தாருங்கள் என்றார்